Connect with us

‘பொதுக்குழு செல்லாது’ ஈபிஎஸ் வழக்கில் இன்று இறுதி விசாரணை!!

admk meeting

தமிழகம்

‘பொதுக்குழு செல்லாது’ ஈபிஎஸ் வழக்கில் இன்று இறுதி விசாரணை!!

ஜூலை 11ஆம் தேதி அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் இடைக்கால பொதுச் செயலாளராக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் இவர்கள் இருவரின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பு மாறி மாறி தாக்கி கொண்டனர். மேலும் இது தொடர்பாக ஓபிஎஸ் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்தார்.

எனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழு வழக்கு இன்னும் இரண்டு வாரங்களில் விசாரித்து தீர்ப்பளிக்க உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு நடத்தியது செல்லாது என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கானது இன்று இறுதி விசாரணை பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் இறுதி விசாரணை நடத்துகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top