தம்மை பற்றி நடிகர் விமல் கூறு குற்றச்சாட்டு அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என திரைப்பட தயாரிபாளர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் திரைப்படத் தயாரிபாளர் சிங்கார வேலன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் நடிகர் விமல் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கிவிட்டு தராமல் ஏமாற்றி வருகிறார் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர் கணேசன் என்பவர் தயாரித்து பாதியில் நிற்கப்பட்ட மன்னர் வகைவகையரா என்ற திரைப்படம் எடுப்பதற்கு பணம் தேவை என்றார். அதன் அடிப்படையில் 5 கோடி ரூபாய் பணத்தை தனது நண்பர் கோபி என்பவர் மூலம் கடன் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் களாவானி திரைப்படத்தின் விநியோக உரிமையை தருவதாக கூறி தன்னிடம் நடிகர் விமல் மேலும் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்தாகவும் சிங்கார வேலன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் களவாணி திரைப்படம் விநியோக உரிமை வழங்கப்படவில்லை. இதனை நடிகர் விமலிடம் தொடர்ந்து பணம் கேட்டதின் அடிப்படையில் தான் அளித்த பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 7 0 லட்சத்திற்கான காசோலை கொடுத்தார். ஆனால் அந்த காசோலை உரிய பணம் இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து திசை திருப்புவதர்க்காக நானும்,தனது நண்பர் கோபியின் மீது பொய்யாக ஒரு புகாரை நடிகர் விமல் அளித்துள்ளர்.
எனவே நடிகர் விமல் தங்களுக்கு அளிக்க வேண்டிய பணத்தை பெற்று தர வேண்டும் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் சிங்கார வேலன் குறிப்பிட்டுள்ளர்.