Connect with us

இளம் பெண்களை சினிமா ஆசைக் காட்டி ஆபாச படம் எடுத்த இயக்குனர் குண்டாசில் கைது

arrest

தமிழகம்

இளம் பெண்களை சினிமா ஆசைக் காட்டி ஆபாச படம் எடுத்த இயக்குனர் குண்டாசில் கைது

இளம் பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆசைக் காட்டி, ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த சினிமா இயக்குனர் வேல் சத்ரியன் மற்றும் அவருடைய உதவியாளர் இளம்பெண் ஜெயஜோதி ஆகிய இருவரையும் சேலம் மாநகர போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்….

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி இரும்பாலையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக சேலம் ஐந்து ரோட்டில் உள்ள நோபல் கிரியேஷன்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் இயக்குனர் எடப்பாடி சேர்ந்த வேல்சத்ரியன் மற்றும் அவருடைய பெண் உதவியாளர் ஜெயஜோதி ஆகிய இருவரையும் சேலம் மாநகர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் இருவரையும் தனித்தனியே போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியப்பின் மீண்டும் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . இந்த நிலையில் வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகிய இருவரையும் இன்று சேலம் மாநகர போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top