
தமிழகம்
அதிமுக அலுவலகத்தில் அடிதடி!! முன்னாள் அமைச்சருடன் வந்த நிர்வாகி மீது சரமாரியாக தாக்குதல்;
இன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இடையே பெரும் மோதல் நடைபெற்று உள்ளதாக தெரிகிறது. இதில் பல தொண்டர்கள் ரத்த காயங்களுடன் அலுவலகத்தை விட்டு வெளியே வருகின்றனர்.
அந்தப்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் ஏற்பட்டு தொண்டர்கள் காயமடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் வந்த நிர்வாகி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒற்றை தலைமை சர்ச்சையால் அடிதடி மற்றும் மோதல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து செய்திகள் பரபரப்பாக கிடைத்துள்ளன. அதிமுக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மாறி மாறி முழக்கமிட்டு வருகின்றனர். இதன் மத்தியில் தொண்டர் ஒருவர் ரத்த காயங்களுடன் உடன் வெளியே வந்து பேட்டி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
