Connect with us

அம்பேத்கர் பிறந்த நாளுக்கு அடிதடி…! விசிக-பாஜக இடையே கைகலப்பு!!

ambedkar pti

Tamil Nadu

அம்பேத்கர் பிறந்த நாளுக்கு அடிதடி…! விசிக-பாஜக இடையே கைகலப்பு!!

அம்பேத்கர் பிறந்த நாளுக்கு அடிதடி…! விசிக-பாஜக இடையே கைகலப்பு!!

இன்றைய தினம் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்தியா எங்கும் இன்று அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பல இடங்களில் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளன்றும் அரசியல் கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டு ரத்த காயங்கள் ஆகும்வரை சண்டை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த சம்பவம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றுள்ளது.

அதன்படி இன்று அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி 11 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11:45 மணிக்கு பாஜகவினர் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆங்காங்கே விடுதலை சிறுத்தைகள் கட்சி- பாஜகவும் கொடிகள் மாறி மாறி வரிசையாக இருந்தது இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தின் முடிவில் இடையே கைகலப்பு உண்டானது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பாஜகவினரும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார் வந்து குவிந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top