Connect with us

டாஸ்க்கில் வனிதாவிற்கும் கஸ்தூரிக்கும் ஏற்பட்ட சண்டை!

Entertainment

டாஸ்க்கில் வனிதாவிற்கும் கஸ்தூரிக்கும் ஏற்பட்ட சண்டை!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 ஆனது அனைவராலும் பேசப்படும் அளவு சென்று கொண்டிருக்கிறது, தயாரிப்புக் குழு டாஸ்க் என்கிற பெயரில் எதையாவது கொடுத்து பிரச்சினையைத் தூண்டுவதிலேயே குறிக்கோளாக உள்ளது. சும்மா இருந்த ஊதிக் கெடுத்ததுபோல, தயாரிப்புக் குழு செய்யும் வேலையானது சும்மா இருப்பவர்களையும் உசுப்பேற்றும்படியாக உள்ளது.

கடந்த வியாக்கிழமை ஹலோ ஆப் மூலம் ஏற்பட்ட பிரச்சினையால் மதுமிதா வீட்டை விட்டு வெளியேற,  அதேபோல் டிசைன் பண்ணி ஒரு சிறப்பான டாஸ்க்கை இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக கொடுத்தார் பிக் பாஸ்.

21ed8349343bf91f2c2a6a9b8f473aac

“அம்மா நான் போயிட்டு வரேன்” என்ற பெயரில் இந்த டாஸ்க் நடந்தது. கஸ்தூரி வகுப்பு ஆசிரியர், சேரன் தலைமை ஆசிரியர் மற்றும் வனிதா உட்பட அனைத்து போட்டியாளர்களும் பள்ளிக் குழந்தைகள்.

சிறப்பாக போய்க் கொண்டிருந்த டாஸ்க்கின் இடையே கஸ்தூரி பிக் பாஸ் மாணவர்களுக்கு வாத்து பாடல் சொல்லிக் கொடுத்தார். அப்போது கஸ்தூரி தன்னை ’வாத்து’ என்று கூறியதாக வனிதா சொன்னார். 

இதனால் எப்போதும் போல பிரச்சினை ஆரம்பித்தது, அதைத் தொடர்ந்து இந்த விஷயம் வனிதாவைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்பதாக கஸ்தூரி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top