ஐம்பது வருஷத்துக்கு அப்புறமா இரட்டை குட்டிகளை ஈன்ற யானை…!!

பொதுவாக விலங்குகள் அனைத்தும் அதிக அளவு குட்டிகளை ஈனும் தன்மை கொண்டதாக காணப்படும், ஆனால் பெரிய விலங்குகள் அந்த அளவிற்கு குட்டிகளை ஈனுவதில்லை. அதுவும் குறிப்பாக யானையானது ஒரு குட்டி போடும் தன்மையை கொண்டது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஒரு பெண் யானை இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

இதனால் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வந்துள்ள சுற்றுலாவாசிகள் யானை மற்றும் குட்டிகளோடு உள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இரட்டை குட்டிகளை ஈன்ற யானை ஆர்வமோடு தனது குட்டிகளோடு விளையாடி கொண்டு உள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் அந்த யானையானது சோர்வுற்று வெளியே வரும் வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. 1971ஆம் ஆண்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு யானை இரட்டை குட்டிகளை ஈன்றது. அதற்குப் பின்பு தற்போதுதான் இரட்டை குட்டிகளை ஒரு பெண் யானை ஈன்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment