
செய்திகள்
தேவாலயத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்-50 பேர் சுட்டுக்கொலை!!!
தற்போது உலகமெங்கும் கொடூரமான செயல்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அதுவும் குறிப்பாக துப்பாக்கிச்சூடு என்பது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் உயிர்களின் மதிப்பு என்பது தெரியாமலேயே போய்விட்டு வருகிறது.
அதன் வரிசையில் நைஜீரியா நாட்டில் தேவாலயத்தில் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நைஜீரியா நாட்டில் ஓண்டோ மாகாணத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
கத்தோலிக்க தேவாலயத்தில் இருந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். ஓண்டோ மாகாணத்திலுள்ள ஓவோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் பலரும் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.
