Connect with us

15ஆம் நாள் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!!

cotton price

தமிழகம்

15ஆம் நாள் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!!

சில மாதங்களாகவே ஜவுளித் துறையில் பெரும் போராட்டங்கள் நடைபெறுவதாக காணப்படுகிறது. ஏனென்றால் பஞ்சு மற்றும் நூல்களின் விலை தாறுமாறாக விலை உயர்ந்துள்ளதால் நெசவாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசுக்கு பல்வேறு விதமான கோரிக்கைகளையும் வைத்தனர். அதோடு மட்டுமல்லாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக ஜவுளித் துறையில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் 15ஆம் நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.

நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் இரண்டு லட்சம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். வேலை நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 கோடி அளவில் ஜவுளி உற்பத்தி பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்துதல், உற்பத்தி செய்துள்ள காடா துணிகளுக்கு உரிய விலை கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top