Connect with us

தூய்மைப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் குடியரசு தின அணிவகுப்புக்கு வர அழைப்பு!

republic day parade 164244510516x9 1

செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் குடியரசு தின அணிவகுப்புக்கு வர அழைப்பு!

தூய்மைப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் குடியரசு தின அணிவகுப்புக்கு வர அழைப்பு!

ஜனவரி 26-ஆம் தேதி இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படும். இதற்காக ஜனவரி 23ஆம் தேதி முதலே குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதன்படி டெல்லி ராஜபாதையில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு விழாவுக்கு தூய்மைப் பணியாளர், கட்டட தொழிலாளர்கள், அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முன் களப்பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களும் குடியரசு தின அணிவகுப்பு வர அழைத்துள்ளது ஒன்றிய அரசு.

சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் அணிவகுப்பைப் பார்க்க வாய்ப்பு கருதுவதே நோக்கம்- பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் சுமார் 600 இளம் கலைஞர்கள் பங்கேற்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து போட்டிகள் நடத்தப்பட்டு 600 கலைஞர்களும் தேர்வு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கலாச்சார அமைச்சகங்கள் இணைந்து வந்தே பாரதம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top