விருதுநகரில் தொழிற்சாலையில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி பலி!

விருதுநகர் மாவட்டம், ராமலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பணிபுரிந்த 55 வயது பெண் இன்று மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புஷ்பம் (55) என்பவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக புஷ்பம் சடலத்தை அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் மின்னல் தாக்கி 40 வயது பெண் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

தண்ணீர்,உணவு, மின்சாரம் இல்லை: சூடான் போரில் மாட்டிக்கொண்ட தமிழர்கள் நிலைமை!

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.