தரமற்ற உணவால் 200 பேருக்கு வாந்தி, மயக்கம்! பெண் ஊழியர்கள் சாலை மறியல்!!

நம் இந்தியாவில் தினந்தோறும் மறியல் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் பெரும்பாலும் ஊழியர்களே. இந்த நிலையில் இன்று காலை பெண் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த மறியல் போராட்டம் நம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து அங்கு பணிபுரியும் ஆயிரம் பெண் ஊழியர்கள் மறியலில் ஈடுபடுகின்றனர்.

செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் உள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி  தனியார் நிறுவன விடுதியில் உணவு சாப்பிட்ட பெண்கள் சுமார் 200 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

பெண் ஊழியர்களின் போராட்டத்தை நெடுஞ்சாலையில் பல மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் பெண் ஊழியர்களிடம் காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஆயினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment