பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆசாமி.. ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி!

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முழு விமான கட்டணத்தையும் திருப்பிக் கொடுத்ததுள்ளது.

கடந்த நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் பயணிகளுடம் வந்து கொண்டிருந்தது. அப்போது மதிய உணவு வேளையில் போதை ஆசாமி ஒருவர் பெண் மிதியவர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.. திருப்பூரில் பயங்கரம்!

இதனை பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானப் பணியாளர்கள் மிதியவரை அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே பாதிக்கப்பட்டவர் நேரடியாக டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனிடம் புகார் கொடுத்திருந்தார்.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது எவ்வித நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் சம்மந்தப்பட்டவர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வாட்ஸ்அப் குரூப்பை விட்டு நீக்கம்.. அட்மினின் நாக்கை அறுத்த கொடூரம்!

தற்போது பாதிக்கப்பட்டவருக்கு முழு விமான கட்டணத்தையும் ஏர் இந்தியா நிறுவனம் திருப்பிக் கொடுத்தது விட்டதாகவும், சக பயணி மீது சிறுநீர் கழித்தவர் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.