இந்தியாவில் பெண்கள் கருவுறுதல் விகிதம் குறைவு; அதிர்ச்சி தகவல் !!

இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அதில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று தேசிய குடும்ப நல துறை ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் ஆய்வறிக்கையை கடந்த 4 ஆண்டுகளாக உடல் எடையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 இல் இருந்து 23% ஆக அதிகரித்துள்ளதாகவும் பெண்களின் எண்ணிக்கை 21 இலிருந்து 24 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 41 சதவீதம் பெண்களின் உடல் பருமன் அதிகரித்து இருப்பதாகவும் அதேபோல் தேசிய அளவில் பெண்கள் கருவுறுதல் வீதம் 2.2- ல் இருந்து 2.0- ஆக குறைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 5- வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குன்றிய நிலை 38-ல் இருந்து 36%- ஆக குறைந்துள்ளது. திருமண வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் குறைவான மாநிலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடம்பெற்றுள்ளது.

மேலும், வங்கி மற்றும் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 53% இருந்து 79% ஆக அதிகரித்துள்ளது என தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment