Connect with us

திருப்பூர் சூட்கேசில் பெண் சடலம் மீட்பு-கொலையாளியாக மாறிய கணவன் அசாமிற்கு தப்பியோட்டம்!

women body

News

திருப்பூர் சூட்கேசில் பெண் சடலம் மீட்பு-கொலையாளியாக மாறிய கணவன் அசாமிற்கு தப்பியோட்டம்!

திருப்பூர் சூட்கேசில் பெண் சடலம் மீட்பு-கொலையாளியாக மாறிய கணவன் அசாமிற்கு தப்பியோட்டம்!

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அசம்பாவிதங்கள், கொடூர செயல்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அந்தப்படி வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிழைக்க வந்தவர்கள் கொடூர செயல்களில் ஈடுபட்டது பெரும் வேதனை அளிப்பதாக காணப்படுகிறது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தில் வந்த பெண், ஆண் நண்பர்களோடு வீடு எடுத்து தங்கி பணியாற்றியுள்ளார். முரண்பாடு காரணமாக அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து திருப்பூரில் கால்வாய்க்கு அடியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்டு கணவனை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதில் இரண்டு இளைஞர்கள் சூட்கேசை சாலையோரம் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் மனைவியை கொலை செய்து சூட்கேசில் வைத்து வீசி சென்றது தனிப்படை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கொலைக்கு உதவிய அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெயலால் என்பவன் நேற்று ஓசூரில் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் அபிஜித்தை பிடிப்பதில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டிக் கொண்டு வருகின்றனர்.

செல்போன் சிக்னலை வைத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலையாளியாக மாறிய கணவன் அபிஜித் அசாம் மாநிலத்திற்கு தப்பி சென்றதாகவும் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top