நம் தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் சாதியக் கொடுமைகள் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மத்தியிலும் சாதி விதையை விதைக்கப் பட்டு வருவது வேதனையான ஒன்றாக காணப்படுகிறது.
இதன் உச்சகட்டமாக ஜாதிக் கொடுமை காரணமாக சக மாணவனை தீயில் தள்ளிய மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஜாதி பெயரை கூறி ஆறாம் வகுப்பு மாணவரை தீயில் தள்ளிய சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறை விசாரணை கொண்டுவருகிறது. சகமாணவர்கள் தீயில் தள்ளியதில் படுகாயம் அடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய சம்பவம் தமிழகமெங்கும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் செயல் ஒவ்வொன்றும் அச்சுறுத்தலை கொடுப்பதாகவே காணப்படுகிறது.