தமிழகத்தில் பள்ளிகளை திறக்க கூட்டமைப்பு கோரிக்கை!!!

74b5d96b5a4526a45b388a6f7a7ccefd

தற்போது நம் தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு மேல் ஆகவே பள்ளிகள் திறக்க வில்லை என்றே கூறலாம். காரணம் என்னவெனில் நோய்த் தொற்று அதிகமாக இருந்ததால் மாணவர்களுக்கு பரவக் கூடும் என்று அவர்கள் பாதுகாப்பு கருதி பள்ளிகள் திறக்கப் படாமல் மூடப்பட்டுள்ளன. இதனால் பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் இருக்கிறது. ஆனால் அவைகள் பெரும்பாலும் மாணவர்களுக்கு பிரயோஜனமாக அமையவில்லை என்றே கூறலாம் மேலும் பள்ளி திறந்தால் மட்டுமே மாணவர்களால் பாடங்கள்  மட்டுமின்றி ஒழுக்க நெறிகளையும் கற்றுக்கொள்ள இயலும்.a0d2b713cd264c3c68cce6e8a30984f1

 தற்போது அமைச்சராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். அவரிடம் அவ்வப்போது பள்ளிகள் திறப்பு பற்றி கேள்விகள் கேட்கப்படும்.  இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வி அமைச்சருடன் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ சென்னை தி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மேலும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் 9 10 11 12 பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார் மேலும் டீ.சி இல்லாமல் எந்த வகையான பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என்று கூட்டமைப்பின் செயலாளர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment