தேசத்துரோக வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசு!!

உச்சநீதிமன்றம் தற்போது சில அறிவுரைகளைக் கூறியுள்ளது. அதன்படி தேசத்துரோக வழக்கு சட்ட பிரிவை மறு ஆய்வு செய்து முடிக்கும் வரை அந்த பிரிவின்படி வழக்குப்பதிவு கூடாது என்று கூறியுள்ளது.

தேசத்துரோக வழக்கு பதிவு சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பல வழக்குகளில் சிறையில் இருப்போர் பிணை கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் கூறினார்.

பிணைகோரும் மனுக்களை நீதிமன்றங்கள் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு தேச விரோத செயல் என்று அடையாளம் காணக் கூடியதை வழக்காக பதிவு செய்யாமல் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

தேசத்துரோக வழக்கு பதிய தடை விதிப்பது சரியாக இருக்காது. தவறான எடுத்துக்காட்டாக விடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் செயல் என தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment