News
வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!
சில நாட்களாக மக்கள் அனைவரும் சொல்லும் ஒரு வார்த்தை கொரோனா. இந்த கொரோனாவானது மக்களுக்கு தெரியாமல் மக்களுக்கு புகுந்து மக்களின் உயிரை வாங்குகிறது இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா நோய்த் தொற்றானது முதன் முதலில் நமது நட்பு நாடான சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக பரவ தொடங்கியது. குறிப்பாக இந்தியாவில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் இந்திய அரசானது நாடு முழுவதும் திட்டத்தை அமல்படுத்தி கடந்த ஆண்டின் இறுதியில் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சில வாரங்களாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக பரவுகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து விதிகளையும் கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளது .தற்போது இந்தியாவில் இரண்டு விதமான கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன.ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அரசானது சில முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி வெளி நாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் செய்துள்ளது. மேலும் தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமெரிக்கா பிரிட்டன் ஜப்பான் ஐரோப்பாவில் உள்ள கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல் செய்துள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகளையும் பயன்படுத்த இந்திய அரசின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
