28 நாளில் 9 நாட்கள் விடுமுறையா? பிப்ரவரி மாத வங்கி விடுமுறை விபரங்கள்!

பிப்ரவரி மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் இந்த மாதம் வெறும் 28 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் ஒன்பது நாட்கள் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கிகளின் பரிவர்த்தனை தற்போது பெரும்பாலும் ஆன்லைன் மூலமே இருந்தாலும் ஒரு சில முக்கிய நிகழ்வுகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில் வங்கிகள் விடுமுறை நாட்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொண்டால்தான் வங்கிகளுக்கு நேரடியாக செல்வது குறித்து திட்டமிட முடியும். இந்த நிலையில் இம்மாதம் வங்கிகளுக்கு இரண்டாவது சனி மற்றும் நான்காவது சனி ஆகிய இரண்டு நாட்களும், நான்கு ஞாயிறு நாட்களும் விடுமுறை என்ற நிலையில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் கூடுதலாக மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

bank holidaysபிப்ரவரி மாத வங்கிகள் விடுமுறை குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

பிப்ரவரி 5: ஞாயிறு

பிப்ரவரி 11: இரண்டாவது சனிக்கிழமை

பிப்ரவரி 12: ஞாயிறு

பிப்ரவரி 19: ஞாயிறு

பிப்ரவரி 25: நான்காவது சனிக்கிழமை

பிப்ரவரி 26: ஞாயிறு

பிப்ரவரி 15: Lui-Ngai-Ni விடுமுறை இம்பால் நகருக்கு மட்டும் பொருந்தும்ன்

பிப்ரவரி 18: மகாசிவராத்திரி விடுமுறை. அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, போபால், புவனேஷ்வர், டேராடூன், ஹைதராபாத் , ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு மட்டும் பொருந்தும்

பிப்ரவரி 20: ஜஸ்வால் மாநில தினம்.

பிப்ரவரி 21: திபெத் புத்தாண்டு விழா விடுமுறை. காங்டாக் நகருக்கு மட்டும் பொருந்தும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews