நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்…..! இரண்டு நாட்கள் என்னென்ன ஆகுமோ என்ற அச்சம்!!
நேற்றைய தினம் மத்திய அரசு மாநிலங்களுக்கு 24 மணி நேரம் தடையில்லா மின்சாரத்தை வழங்க உத்தரவிட்ட இருந்தது. ஏனென்றால் நாடெங்கும் மார்ச் 28, 29 ஆகிய இரண்டு தினங்களில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
அதன்படி இன்று காலையே நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. அதன்படி 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்றைய தினமும் நாளைய தினமும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், மின்சார சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
நம் தமிழகத்திலும் இந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக தலைநகர் சென்னையில் பல்லவன் போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஒன்றிய அரசை கண்டித்து இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
