குழந்தைகளை கவனிப்பது தந்தையின் பொறுப்பு – ஐகோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் மைனர் குழந்தைகளை கவனிக்கும் கடமையில் இருந்து தந்தை தப்பிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் காட்டமாக தெரிவித்திருக்கிறது.

கருத்துவேறுப்பாடு காரணமாக விவாகரத்து வழங்க கோரி கணவர் பூந்தமல்லிநீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது திருச்சியில் 11 மாத குழந்தையுடன் வசித்து வருவதால் தன்னால் அடிக்கடி சென்னை வர முடியாது என்பதால் வழக்கு திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தப்போது 11 மாத குழந்தையை வளர்க்க கணவன் எந்தவொரு ஜீவன் அம்சமும் வழங்கவில்லை என பெண் வீட்டார் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் குழந்தையை பார்க்க அனுமதிக்காத மனைவிக்கு எப்படி ஜீவனாம்சம் வழங்க முடியும் என கணவர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதி குழந்தையின் கல்வி, வாழ்க்கை செலவுகளை மேற்கொள்ள வேண்டியது தந்தையின் கடமை எனவும், கணவரை பிரிந்து வரும் மகளின் குழந்தையை கவனிக்கும் சுமை தாத்தா, பாட்டிக்கு வந்துவிடுவதாக நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் வேதனை தெரிவித்திருக்கிறார்.

அதே போல் குழந்தைகளை கவணிக்கும் பொறுப்பிலிருந்து வருவாய் ஈட்டும் தந்தை தப்பிப்பது பொறுத்துக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதி ஜீவனாம்ச மனுத்தாக்கல் செய்யாவிட்டாலும் அதை வழங்க நீதிமன்றம் உத்தரவிட உரிமை இருப்பதாக தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார்.

அதோடு விவாகரத்து வழக்கை திருச்சிக்கு மாற்றியும் குழந்தைக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கணவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.