தந்தையர் தின வாழ்த்துக்கள்: பிரபலங்களின் தந்தைகள் புகைப்படம் வைரல்!

a18e0199209c91a96fcb2f0da6e89568-1

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றார்கள். இந்த பதிவுகளுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர்கள் தனுஷ், பிரசன்னா, விஷ்ணுவிஷால், நடிகைகள் விஜய் டிவி ஜாக்லின், வரலட்சுமி சரத்குமார், நதியா, உள்ளிட்ட பலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தங்கள் தந்தையுடன் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் சமூக வலைதள பயனாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தந்தையர் தினத்தின் பொன்மொழிகளும் வைரலாகி வருகிறது.  பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவது ஒருபுறம் இருந்தாலும் தான் அனுபவித்த கஷ்டங்களை தனது பிள்ளைகள் ஒருபோதும் அனுபவிக்கக் கூடாது என்று நினைப்பது தான் அப்பாவின் இதயம் எனவும், எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும் அப்பாவை போல யாராலும் இருக்கவே முடியாது எனவும் தந்தையர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.