Connect with us

அப்பா, மகன், மகள் மூன்று பேரும் கவுன்சிலர்கள்! ஏரலில் வெளியான தேர்தல் முடிவு;

Local body election 1

தமிழகம்

அப்பா, மகன், மகள் மூன்று பேரும் கவுன்சிலர்கள்! ஏரலில் வெளியான தேர்தல் முடிவு;

அப்பா, மகன், மகள் மூன்று பேரும் கவுன்சிலர்கள்! ஏரலில் வெளியான தேர்தல் முடிவு;

நேற்றைய தினம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் அதிகளவு திமுகவின் ஆதிக்கமே தெரிகிறது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட முடிவுகள் அனைத்தும் பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் அளித்துள்ளதாகவே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள் என மூவரும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதன்படி ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஏரல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளில் அமமுக சார்பில் 5 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி 15வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஏரல் ரமேஷ் வெற்றி பெற்றார். அவரது மகன் பால கவுதம் 1வது வார்டில் வெற்றி பெற்றார். அவரின் மகள் மதுமிதா இரண்டாவது வார்டில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top