Connect with us

‘கட்ட முடியாத கடன்’ மனைவி, பிள்ளைகளை கொலை செய்து தந்தை தற்கொலை முயற்சி!!

208695 girlsuicide 1

தமிழகம்

‘கட்ட முடியாத கடன்’ மனைவி, பிள்ளைகளை கொலை செய்து தந்தை தற்கொலை முயற்சி!!

ஒவ்வொரு நாளும் நம் தமிழகத்தில் யாராவது ஒருவர் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது போல் புள்ளிவிவரங்கள் மாறி உள்ளது. அந்த அளவிற்கு தற்கொலை செய்து கொள்வது எண்ணிக்கை நாளுக்கு நாள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.

அவர்கள் பலரும் கஷ்டத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி அசலை திருப்பி தர முடியாமல் அசலுக்கு மேல் வட்டி சென்று தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும், தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தின் எண்ணிக்கையும் தமிழகத்தில் பரவலாக காணப்பட்டு கொண்டு வருகிறது.

மேலும் அவர்கள் மனைவி மகள்கள் என அனைவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த நிலையில் தற்போது தந்தை ஒருவர் இரண்டு பிள்ளைகள், மனைவி ஆகியோரை கொலை செய்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் கடன் கடன் தொல்லையின் காரணமாக மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் தந்தை.

அதன்படி மனைவி சுரேகா, 12 வயது மகள் யோகிதா மற்றும் 11 வயது மகன் மோகனன் ஆகியோரை கொன்று தந்தை முருகன் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ஊமச்சிகுளம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை முருகன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top