Connect with us

அப்பா, அம்மாவிற்கு சிலை வைத்து அசத்திய ஆய்வாளர்..!

mayiladi01

தமிழகம்

அப்பா, அம்மாவிற்கு சிலை வைத்து அசத்திய ஆய்வாளர்..!

திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி கிராமத்தில் தாய் தந்தையருக்கு சிலை வைத்த முன்னாள் சார்பு ஆய்வாளர் குடும்பத்தில் உள்ள முதியவர்களை முதியோர் காப்பகம், ஆதரவற்றோர் இல்லம் போன்ற இடங்களில் தள்ளும் நிலையில் பெற்ற தாய் தந்தைக்கு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சிலை வைத்த “சபாஷ்” சார்பு ஆய்வாளர் .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 57) இவர் தமிழ்நாடு காவல்துறையில் தனிபிரிவு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும் பொன்மணி என்ற மகனும் திவ்யபாரதி என்ற மகளும் உள்ளனர். மேலும் இவருக்கு 5 சகோதரிகள் (3 அக்கா , இரு தங்கை) ஒரு தம்பி என பெரிய குடும்பமாக அருகருகே உள்ளனர்.

ரமேஷ்பாபு தனது தாய் தந்தையரை போற்றும் வகையில் குடும்பத்தினருடன் ஆலோசித்து சிலை வைக்க முடிவு செய்தார். இதன் அடிப்படையில் தனது தந்தையின் பிறந்த தினத்தை முன்னிட்டு தனது வீட்டின் அருகே ஏற்கனவே சிறுவயதில் மறைந்த அத்தை ராஜாமணியின் படம் வைத்து வழிபடும் இடத்தில் தனது தந்தை பொன்னாண்டியா பிள்ளை தாயார் மீனாம்பாள் ஆகிய இருவருக்கும் சிலையை வடிவமைத்தார்.

தனது தந்தை பொன்னாண்டியா பிள்ளையின் பிறந்த தினத்தன்று சகோதரிகள், சகோதரர்கள், பேரன், பேத்திகள் ஆகியோருடன் சேர்ந்து சிலைக்கு கும்பாபிஷேகம் செய்தனர். பெற்றோர்களை முதியோர் காப்பகம் அனாதை இல்லத்தில் சேர்த்து விடும் சூழ்நிலையில் மறைந்த தாய் தந்தையர் ஞாபகார்த்தமாக சிலை வைத்து வழிபடும் வித்தியாசமான சார்பு ஆய்வாளர் ரமேஷ்பாபு. இது குறித்து செய்தியாளிடம் ரமேஷ்பாபு கூறுகையில் எனது தந்தையின் ஞாபகார்த்தமாக தாயாரின் சிலையுடன் சேர்த்து இங்கு கோயில் கட்டி உள்ளோம்.

அது குடும்பத்தில் உள்ள மூத்தவர்களை மரியாதை செய்யும் விதமாகவும் வரும் காலத்தில் பிள்ளைகளுக்கு முதியோர்களின் அரவணைப்பு பாசம் போன்றவை எடுத்துக்காட்டாக இருக்கும் விதமாகவே இந்த சிலைகள் அமைக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எனது தந்தையின் பிறந்த தினத்தை ஒட்டியே திருமணம் வளைகாப்பு போன்ற விசேஷங்கள் நடைபெறும் . எனது சகோதரிகள் மற்றும் அவர்களின் மகன், மகள் உறவினர்கள் என நூற்றி ஐம்பது பேர் வரை எங்கள் குடும்பம் மிகப்பெரியது .

இதில் ஒவ்வொரு நிகழ்வும் எங்களது தாய்,தந்தையின் படத்தின் முன்பு வீட்டில் நடைபெற்றது. இதே போல் பேரன் , பேத்திகளும் சேர்ந்து ஒவ்வொரு குடும்ப நிகழ்விலும் தங்களது தாத்தா ,பாட்டி சிலையை வணங்கி செல்வதால் அவர்கள் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வும் இருப்பதாக கூறினார்கள் தற்போது சிலை முன்னே நடைபெறும் என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top