கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் விஷ வாயு கசிவால் மரணம் அடைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் கட்டிடங்கள், வீடுகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தொழிலாளர்களுக்கு மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே போல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்படுவதை மக்கள் அறிந்தால் 14420 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், இத்தகைய நடவடிக்கைகளால் மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.