திருவள்ளூரில் விவசாயிகள் நல தினக் கூட்டம் புதன்கிழமை நடைபெறும்!

திருவள்ளூரில் விவசாயிகள் நல தினக் கூட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தலைமையில் நடைபெறுகிறது என தகவல் கிடைத்துள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தீர்க்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வேளாண் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் இதர வேளாண்மை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட துறையினர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

கூட்டணியில் குழப்பம் இல்லை – அண்ணாமலை

கூட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் தீர்வு காணப்படாத மனுக்களை மட்டும் விவசாயிகள் அளிக்குமாறு கேட்டுக்கொண்ட கலெக்டர், விவசாயிகள் மற்றும் துறை அலுவலர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து முகமூடி அணிந்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.