லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று கோலமாவு கோகிலா. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாசி பதனா என்ற நகரில் நடைபெற்று வந்தது. அப்போது கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக பஞ்சாப் மாநில விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் நிலையில் தங்களுடைய போராட்டத்திற்கு பாலிவுட் நடிகர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறி ஜான்வி கபூர் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர்
இதனை அடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய இயக்குனர் கண்டிப்பாக ஜான்வி கபூர் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதனை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் படப்பிடிப்பு 3 மணி நேரம் தாமதம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு பதிவை பதிவு செய்தார். விவசாயம்தான் நாட்டின் இதயம் என்றும் நமது நாட்டிற்கு உணவளிக்கும் அவர்கள் பங்கை நாம் அங்கீகரிக்க வேண்டுமென்றும் அவர்கள் ஆதாயம் அடையும் வ்கையிலான தீர்மானம் அவர்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் பதிவு செய்துள்ளார்