Connect with us

விவசாயிகள் வலிமை பெற வேண்டும்! புதிய இந்தியா மேலும் வலிமை பெறும்!!

மோடி விவசாயி

News

விவசாயிகள் வலிமை பெற வேண்டும்! புதிய இந்தியா மேலும் வலிமை பெறும்!!

விவசாயிகள் வலிமை பெற வேண்டும்! புதிய இந்தியா மேலும் வலிமை பெறும்!!

நாளுக்கு நாள் விவசாயமானது விழுந்து கொண்டே வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநில மற்றும் மத்திய அரசு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் திட்டங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு நாட்டின் விவசாயிகள் வலிமையானவர்களாக மாறினால்தான் புதிய இந்தியா மேலும் வலுவானதாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவசாயம் தொடர்பான பல திட்டங்களினால் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைத்து வருவது மகிழ்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 11.3 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூபாய் 1.52 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமரின் கிசான் சம்மன் நிதியின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதால் சிறு விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர் என்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வேளாண் பொருட்களுக்கான வர்த்தக தளமான நாம் தளத்தில் 1.73 கோடி விவசாயிகள் பதிவு செய்து ரூபாய் 1.87 லட்சம் கோடி வர்த்தகம் பார்த்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top