Connect with us

இனி சாயங்காலத்தில் உழவர் சந்தையில் சிறுதானியம், பயறு வகைகளை விற்க அனுமதி..!!

small grains

Tamil Nadu

இனி சாயங்காலத்தில் உழவர் சந்தையில் சிறுதானியம், பயறு வகைகளை விற்க அனுமதி..!!

இனி சாயங்காலத்தில் உழவர் சந்தையில் சிறுதானியம், பயறு வகைகளை விற்க அனுமதி..!!

இன்று காலை சட்டப்பேரவையில் 2022ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய பட்டு வருகிறது. இதனை தமிழகத்தின் வேளாண்மை துறை அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார். அவர் இலவச மின்சாரம், டிஜிட்டல் விவசாயம், கரும்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல துறைகளுக்கு தேவையான பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது உழவர் சந்தையில் மாலை நேரத்தில் சிறு தானியம், பயறு வகைகளை விற்பனை செய்ய அனுமதித்து உள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் மட்டும் சிறு தானியம் பயறு வகைகளை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தமிழகத்தில் 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூபாய் 15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள 50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ரூபாயும், மேலும் 10 உழவர் சந்தைகளை அமைக்க ரூபாய் 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உழவர் சந்தைகளில் காய்கறிகளின் வரத்து அதிகரிக்க சிறப்பு திட்டத்திற்கு 5 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளதாக வேளாண் அமைச்சர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top