Tamil Nadu
விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய்: ஐஓசி நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதி என அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மீத்தேன் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இனி இருக்காது என்ற விவசாயிகள் கருதினார்
ஆனால் தற்போது தூத்துக்குடியில் விவசாய பயிர் நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்க ஐஓசி நிறுவன அதிகாரிகள் முயன்றதாகவும் இதற்கு கடும் எதிர்ப்பை அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்ததாகவும் இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவித்தால் மட்டும் போதாது அதை செயல் முறையிலும் ஈடுபடுத்த வேண்டும் என விவசாயிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்
