Connect with us

இலவச மின்சாரத்திற்கு உலை வைக்கும் ஒன்றிய அரசிற்கு விவசாயிகள் கருப்பு சின்ன எதிர்ப்பு

கருப்பு கொடி 2

செய்திகள்

இலவச மின்சாரத்திற்கு உலை வைக்கும் ஒன்றிய அரசிற்கு விவசாயிகள் கருப்பு சின்ன எதிர்ப்பு

ஒன்றிய அரசு மின் திருத்த மசோதா என்கிற பெயரில் விவசாயத்திற்க்கான இலவச மின்சாரத்திற்கு உலை வைக்க பார்க்கிறது தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு:

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது அனைத்து துறை அலுவலர்களும், ஏராளமான விவசாயிகளும் பங்கேற்ற கூட்டத்தில் விவசாயிகள்

ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து, மின் திருத்த மசோதா என்கிற பெயரில் விவசாயத்திற்க்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்திட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்,

கடந்த ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் காலம் கடத்துவதாக புகார் கூறியவர்கள்

அண்டா, குண்டா உள்ளிட்ட பித்தளை பாத்திரங்களை விற்று பயிர்க்காப்பீடுக்கான பிரிமீய தொகையை செலுத்தினோம் ஆனால் ஒன்றிய அரசு இதுவரை காப்பீட்டு தொகையை வழங்கவில்லை என்று கூறியும், யூரியா உள்ளிட்ட உரத்தட்டுப்பாட்டை போக்கிடவும் வலியுறுத்தினர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top