விவசாயிகள் தற்கொலை: இந்தியாவில் 2019 காட்டிலும் 2020ல் 18 சதவீதம் அதிகம்!

விவசாயிகள் தற்கொலை

உலகிற்கே உணவளிக்கும் மிகப்பெரிய பாரம்பரிய தொழிலாக விவசாயம் உள்ளது.என்ன தான் உலகத்தை விவசாயம் உணவு அளித்தாலும் விவசாயிகளின் உரிமைக்குரல் ஆங்காங்கே கேட்ட படாமலே உள்ளது. இதனால் பல விவசாயிகள் தற்கொலையில் முடித்துக் கொள்கின்றனர்.தற்கொலை

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டை விட 2020ஆம் ஆண்டு விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 4006 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் 2016 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் 889 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் 735 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

சொந்தமாக நிலம் இல்லாததும், நீர் பற்றாக்குறையும்,  தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக அமைகிறது. இது தொடர்பாக தேசிய குற்ற ஆய்வு வெளியிட்ட அறிக்கையில் 2020ஆம் ஆண்டு இந்தியாவில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 தற்கொலைகள் நடந்துள்ளன என்றும், அதில் விவசாயத்துறையில் மட்டும் 10 ஆயிரத்து 677 தற்கொலைகள் நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளது.

2016ஆம் ஆண்டு விவசாயத்துறையில் 11 ஆயிரத்து 379 தற்கொலை செய்து கொண்டதே அதிகமாக தற்கொலையாக காணப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் 257 பேரும் அரியானா மாநிலத்தில் 280 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளன.

இவ்விரு மாநிலங்களிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் மாநிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கு வங்கம், பிஹார், நாகலாந்து, திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்கொலை பதிவாகவில்லை என்றும், டெல்லி, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் தற்கொலை பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print