Connect with us

பால்கனியில் இளைஞர் செய்த ‘பகீர்’ காரியம்… ட்விட்டரில் நீக்கப்பட்ட வைரல் வீடியோ!

twitter viral

செய்திகள்

பால்கனியில் இளைஞர் செய்த ‘பகீர்’ காரியம்… ட்விட்டரில் நீக்கப்பட்ட வைரல் வீடியோ!

பால்கனியில் இளைஞர் செய்த ‘பகீர்’ காரியம்… ட்விட்டரில் நீக்கப்பட்ட வைரல் வீடியோ!

டெல்லிக்கு அருகேயுள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஃபரீதாபாத் நகரில் இளைஞர் ஒருவர் பால்கனி கம்பியை பிடித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலானது.

ஃபரீதாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12வது தளத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் பால்கனி கம்பியை பிடித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. துளிகூட அச்சமின்றி உயிரை பணயம் வைத்து பால்கனியின் மறுபுறம் தொங்கிய படி உடற்பயிற்சி செய்துவிட்டு, மீண்டும் இயல்பாக பால்கனி வழியாக வீட்டிற்குள் வந்துவிடுகிறார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானது.

சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த மாதிரியான வீடியோக்கள் தேவையற்றது, சிறு பிள்ளைகளுக்கு பாதகமானது என கடும் கண்டனங்கள் குவிந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வைரல் ஷார்ட் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

கடந்த சில வாரத்திற்கு முன்பு இதே ஃபரீதாபாத் நகரில் பெண் ஒருவர் 8வது தளத்தில் விழுந்துவிட்ட துணியை எடுப்பதற்காக 9வது தளத்தில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து பெற்ற மகனை பெட்ஷீட்டில் கட்டி இறங்கிய வீடியோ வெளியாகி கடும் சர்ச்சைகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

டெல்லிக்கு அருகேயுள்ள ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஃபரீதாபாத் நகரில் மீண்டும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top