நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்து வரும் நிலையில் தடிப்பூசி போட்டுக்கொள்ள சிலர் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயனர்களுக்காக ‘Vaxi Fare’ என்ற ஒரு புதிய திட்டத்தை இண்டிகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தனது டுவிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
இவற்றின் மூலம் டிக்கெட் வாங்கப்படும் அல்லது முன்பதிவு செய்யப்படும் பயணிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்றும் டிக்கெட்டுகள் 15 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் கோவிட் வாக்சின் செலுத்தி கொண்ட சான்றை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும், இல்லை என்றால் தள்ளுபடி ரத்து செய்யப்படும் தெரிவித்துள்ளது.