ஜகமே தந்திரம் பார்ட் 2வா?.. சூர்யா 44 லுக் எப்படி இருக்கு பாருங்க?.. ஜோஜு ஜார்ஜ் வேற!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஜகமே தந்திரம் பார்ட் 2வை இயக்குகிறாரா என்கிற கேள்வியை தற்போது ரசிகர்கள் எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.

சூர்யா 44 லுக்: 

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய நிலையில், அடுத்ததாக வணங்கான் படத்தில் நடித்தார். அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸாக கேமியோ ரோலில் நடித்து மாஸ் காட்டிய சூர்யா ரோலக்ஸ் படத்தின் நடிப்பவன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குவதில் பிசியாக உள்ளார். கைதி 2 படத்தை முடித்து விட்டு தான் ரோலக்ஸ் படத்தை இயக்க அவர் வருவார்.

வாடிவாசல் மற்றும் புறநானூறு படங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். அந்தமானில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை தற்போது கார்த்திக் சுப்புராஜ் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜகமே தந்திரம் பார்ட் 2வா?:

கார்த்திக் சுப்புராஜ் கிளாப் போர்டை எடுத்து முதல் ஷாட்டை ஆரம்பித்து வைக்க ஒரு குட்டிச் சுவரின் மீது கடலைப் பார்த்தபடி உட்கார்ந்து இருக்கும் சூர்யா மெல்லத் திரும்பி கேமராவுக்கு க்ளோசப் ஆக முகத்தை காட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் நடிகர் சூர்யா ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் வைத்தது போல மீசையை கீழே மடக்கி வைத்திருக்கிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், வர வர எல்லா படங்களிலும் க்ளோஸப்பில் முகத்தை காட்டி பூச்சாண்டியை போல போஸ் கொடுத்து வருகிறாரே, இவரது வீடியோவை காட்டியே குழந்தைகளுக்கு சோறு ஊட்டி விடலாம் போல இருக்கிறது என கிண்டல் செய்து வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்துள்ள கங்குவா படத்தின் அப்டேட் ஏதும் வராத நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தனக்கு சூர்யா படம் கிடைத்து விட்டது என கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கு அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவை புக் செய்துள்ள கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் படத்தில் மெயின் ரோலில் நடித்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜை மீண்டும் இந்த படத்திலும் நடிக்க வைத்துள்ளார். ஜெயராம், கருணாகரன் என ஏகப்பட்ட நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/karthiksubbaraj/status/1797274720733421706

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...