உடல்நிலை தேற்றம்;ஆனந்தத்தில் ரசிகர்கள்! எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் ரஜினி?

ரஜினிகாந்த்

சில நாட்களுக்கு முன்பு  டெல்லியில் நடைபெற்ற 67 வது தேசிய சினிமா விருது விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றிருந்தார். அவருக்கு அந்த விழாவில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது.ரஜினிகாந்த்

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மு க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் அவரை வாழ்த்தினர். வாழ்த்துக்களை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

சென்னை திரும்பியவுடன் உடல் நலம் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தார். அவரின் உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்தும், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தனர்.

அதன்பின்னர் மருத்துவ நிர்வாகமும் ரஜினிகாந்த் நலம் பற்றி கூறியுள்ளது. உடல் நலம் மருத்துவம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என தகவல் அளித்துள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print