ரசிகர்களே இவங்க யார் என்று தெரிகிறதா? மெட்ராஸ் பட நடிகைப்பா!!

பொதுவாக சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும். ஏனென்றால் புது புது நடிகைகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக சினிமாவில் வந்து கொண்டே இருக்கும்.

ஆயினும் அவர்களால் 1,2 படங்களுக்கு மேல் சினிமாவை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை காணப்படும். அந்த வரிசையில் ஏராளமான நடிகைகள் உள்ளனர். அவர்களில் தமிழ் சினிமாவில் வந்து ஓரிரு படங்கள் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் டாட்டா காட்டுவது போல் காணப்படும் நடிகை தான் கேத்ரினா தெரசா.

catherine tresaa

இவர் தமிழில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று காணப்பட்டார். அதன் பிறகு அதர்வா நடிப்பில் வெளியான கணிதன் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மட்டுமில்லாமல் ரசிகர்களிடமும் டால் என்று வர்ணிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தமிழில் சற்று அவருக்கு படவாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தது. அதிலும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து அதற்கு பின்பு தமிழ் சினிமாவில் எந்த படங்களிலும் நடிக்காமல் காணப்படுகிறார்.

இருப்பினும் கூட இவர் தெலுங்கு, கன்னடம் படங்களில் பிஸியாக வலம் வந்து வருகிறார். இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பண்பினை உடையவராக காணப்படுகிறார்.

அதன் எதிரொலியாக அவர் அடுத்தடுத்து போட்டோ ஷூட் நடத்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பார். அந்த வகையில் தற்போது இவர் கருப்பு நிற புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். மேலும் அந்த போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

catherine tresa

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.