இது உங்களுக்கு தேவையா? ஏன் இப்படி பண்ணுறீங்க? புது சர்ச்சையில் விஜய் சேதுபதி!

10eff8cdfb943b6e0c95de5481577528

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி தன் இமேஜ் பற்றி கவலையே படுவது இல்லை. முன்னணி ஹீரோவாக இருந்து கொண்டு சக ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். 

அவர் அப்படி விஜய்க்கு வில்லனாக நடித்த மாஸ்டர் படம் கடந்த 13ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் பார்த்த அனைவரும் விஜய் சேதுபதியின் அபார நடிப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாஸ்டர் வில்லனை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.வில்லன் என்று இல்லை, குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சந்தோஷமாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. 

இந்நிலையில் தான் அவர் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பது குறித்து அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு காரணம் அவர் நடிக்கும் கதாபாத்திரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மாநகரம் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்கிறார். மும்பைகர் என்கிற பெயரில் ரீமேக்காகி வரும் அந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாபாத்திரத்தில் விக்ராந்த் மாசே நடிக்கிறார். 

மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மாநகரத்தை போன்று இல்லாமல் மும்பைகர் படத்தில் விஜய் சேதுபதிக்காக அந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதாம். என்ன தான் இருந்தாலும் விஜய் சேதுபதி இந்த அளவுக்கு இறங்கி வர வேண்டுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே மாஸ்டர் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.