Entertainment
போடு! தல பர்த்டே அன்னைக்கு ரசிகர்கள் கொண்டாட்டம்!
தனது திறமையாலும், தனது நடிப்பாலும் இன்று மிகப்பெரிய உச்சத்தில் இருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் இவருடன் நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருந்தனர். இவர் நடிப்பில் வெளியாகிய வீரம் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தனது நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் எப்போது வெளியாகும்? திரைப்படத்தின் அப்டேட் எப்ப என்ன? என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தல ரசிகர்களுக்கு இன்பத்தை அளித்துள்ளார்.
அவர் அஜித்குமாரின் பிறந்தநாளன்று வலிமை படத்தின் போஸ்டர் வெளியாகும் எனவும் கூறினார்.மேலும் மே 1ஆம் தேதிக்கு பின்னர் படத்தின் விளம்பர வேலைகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
