Connect with us

மீரா மிதுனைக் கண்டித்துள்ள ரசிகர்கள்!!

Entertainment

மீரா மிதுனைக் கண்டித்துள்ள ரசிகர்கள்!!

இந்த வார பிக்பாஸ் லக்ஸுரி டாஸ்கின் போது லோஸ்லியாவை பிடிக்க முயற்சித்த சேரன், விளையாட்டு ஆர்வத்தில் மீரா மிதூனின் இடுப்பில் கைப்படும் படி அவரை பலவந்தமாக தள்ளினார். அப்போது எதுவும் சொல்லாமல் விளையாடிவிட்டு, அனைவரும் அமைதியான பிறகு இந்த பிரச்னையை எழுப்பினார் மீரா மிதூன். 

சேரன் மிகவும் நல்லவர் போல தன்னை காட்டிக்கொண்டு விட்டு, தற்போது பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என்ற விதத்தில் புகாரை திசை திருப்பினார் மீரா. இதற்கு அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் கடுப்பாகிவிட்டனர். 

dfb4389452c68a98528108721b8d4d2e-1

எனினும், இயக்குநர் சரவணன் நடுநிலையாக இருந்து மீராவுக்கு பிரச்னையை புரியவைக்க முயற்சித்தார். ஆனால் வழக்கம் போல யார் சொல்வதையும் கேட்டுக்கொள்ளாமல், அவருக்கு என்ன தோன்றியதோ அதையே பேசிக்கொண்டிருந்தார் மீரா. இதனால் அனைத்து போட்டியாளர்களும் அதிருப்தி அடைந்தனர். 

சேரன் மீது மீரா மிதூன் வீண் பழி சுமத்துவதாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து முன் வைத்துள்ளனர். எனினும், நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் மீராவின் புகாரையும் சேரனின் கோரிக்கையையும் தீர விசாரித்து தீர்வு காண வேண்டும் என பிக்பாஸ் பார்வையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top