Entertainment
அபிராமியை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!!!
தொடக்க முதலே பரபரப்பாக சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் அபிராமி அண்ட் டீமுக்கு பிடிக்காதவர்களாகிவிட்டனர்.
இந்த நிலையில், எலிமினேஷனுக்கு சாக்ஷி, கவின், சரவணன், சேரன், மீரா மிதுன், மதுமிதா மற்றும் ஃபாத்திமா பாபு ஆகியோர் பெயர் அடிபட்டது. இதில், மதுமிதாவிற்கு மக்கள் ஆதரவு கொடுத்தனர். இதே போன்று காதல் மன்னன் கவினுக்கும் மக்கள் ஆதரவு கொடுத்தனர்.
இறுதியாக ஃபாத்திமா பாபு தான் முதல் முதலாக பிக் பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் சென்றார். அவர் தான் முதன் முதலாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றவும் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், வழக்கம் போல் அடுத்த நாளுக்கான புரோமோ வீடியோவும் வெளியானது.
இதில், ஒரு புறம் கவினுடன் சண்டையிடும் சாக்ஷியும், மற்றொரு புறம் கோபத்தில் கொதித்த அபிராமியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.

அபிராமி அழுது கொண்டிருந்த போது மதுமிதா உன்னிடம் ஒரு 5 நிமிடம் பேச வேண்டும். ஆனால், அதனை நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று தான் நான் பேசவில்லை என்று நேற்றைய நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதையடுத்து, இன்று வெளியான புரோமோ வீடியோவில், அபிராமி நான் அழுது கொண்டிருந்த போது மதுமிதா உன்னிடம் 5 நிமிடம் பேச வேண்டும் என்று கூறியதை வைத்து சாக்ஷியிடம் கூறுகிறார்.
அதாவது, 5 நிமிடம் பேசட்டும், அதுக்கு அப்புறம் நான் பாத்துக்கிறேன் என்று கூறுகிறார். இந்தப் பொண்ணு திருந்தவே திருந்தாதுபோல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
