Entertainment
சேரன்மீது பழிபோட்டதால் கடுப்பான பார்வையாளர்கள்!!
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதலில் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இவரைத் தொடர்ந்து வாயாடி வனிதாவும் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அடுத்து மோகன் வைத்யாவும் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதல் தற்போது வரை எல்லா பிரச்சனைக்கும் முக்கிய பங்காக இருப்பது மீரா மிதுன் மட்டுமே . ஆனால், அதனை பெரிதாக எண்ணாத மக்கள் விட்டுக்கொடுத்து வந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, அபிரா மற்றும் சாக்ஷி ஆகியோர் சரியாக நடிக்காததால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில், வார விடுமுறை நாட்கள் வந்துவிட்டதால் எலிமினேஷனிலிருந்து மீரா மிதுன், சரவணன், கவின், சாக்ஷி, சேரன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட இருக்கின்றனர். இதில், கடந்த வாரம் நடந்த சம்பவங்கள் மூலம் மீரா மிதுன் வெளியேற்றப்பட இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆம், ஆனால் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் சேரன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து மீரா கொந்தளித்தார். ஆனால் அவருடைய கருத்து மீது நம்பிக்கையில்லாத ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய ஆதரவை சேரனுக்கே தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைதளங்களிலும் மீராவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதனால், இந்த வாரம் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு பார்வையாளர்கள் வந்துவிட்டனர் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.
