கத்தார் நாட்டில் நடைப்பெற்ற கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொண்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்ற போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தி அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றப்பெற்றது.
இந்நிலையில் 2 மணி நேரம் நடைப்பெற்ற போட்டியில் அர்ஜென்டினா வீரர்கள் சிறப்பான விளையாடி இறுதியில் 4-2 என என்ற விதத்தில் முன்னிலைப் பெற்றனர். இதற்கிடையில் போட்டிகளை காண்பதற்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்தில் குவிந்தனர்.
அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை போட்டியானது நேரடியாக ஒளிபரப்பட்டது. அப்போது அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடிய 16 சிறுவன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகு மரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிறுவனின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடிய சிறுவன் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.