தளபதி விஜயை புகழ்ந்து தள்ளிய பிரபல தெலுங்கு நடிகர்….

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்திற்கு புரமோஷன் படு ஜோராக நடந்து வருகிறது.

ஆர்ஆர்ஆர்

புரமோஷன் நிகழ்ச்சிகள் தவிர ராஜமெளலி, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட படக்குழுவினர் நிறைய பேட்டிகளில் பங்கேற்று படத்திற்கான புரமோஷன்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி உள்ளது.

 என்டிஆர்

அதில் தொகுப்பாளினி டிடி தளபதி விஜய் குறித்து ஜூனியர் என்.டி.ஆரிடம் கேட்கிறார். அதற்கு பதிலளித்த என்டிஆர், “தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தலைக்கணம் இளையதளபதி விஜய்க்கு இருந்ததே இல்லை. நான் பலமுறை அவரிடம் பேசியிருக்கிறேன். ஒருமுறைகூட அவரிடம் நான் அதைப் பார்த்ததில்லை. மிகவும் இயல்பாக இருக்கக்கூடியவர்.

திரைப்படத்துறையைப் பொருத்தவரை எனக்கு ஒரு நல்ல நண்பர். மாஸ்டர் படம் வெளியானபோது கூட அவரிடம் தொலைபேசியில் பேசினேன். விஜய்யோட நடனத்துக்கு நான் ஒரு மிகப்பெரிய ஃபேன். பிரண்ட் என்றாலும், நான் அவரை எனக்கு வழிகாட்டியாகவே பார்க்கிறேன்” என விஜயை மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் தெலுங்கு மொழிகளில் நடிப்பதும், அக்கட தேசத்து நடிகர்கள் தமிழ் மொழியில் நடிப்பதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர்கள் இதுபோன்று தமிழ் நடிகர்களை புகழ்ந்து பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment