
பொழுதுபோக்கு
ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடல் பாடிய பிரபல பாடகர் கே.கே மரணம்!!..
இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பாடி ஹிட் கொடுத்த முக்கிய பாடகர்களில் ஒருவர் கிருண்குமார் குன்னாத். கேகே என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் மின்சார கனவு படத்தில் இடம் பெறும் ஸ்ட்ராபெரி கண்ணே பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் பாடிய ஹிட் தமிழ் பாடல்கள் 7ஜி ரெயின்போ காலனி (நினைத்து நினைத்து பார்த்தேன்), கில்லி (அப்படி போடு), ரெட் (ஒல்லிக்குச்சி உடம்புக்காரி), காக்க காக்க (உயிரின் உயிரே) உள்ளிட்ட பல பாடங்களில் ஹிட் பாடல்களை கேகே பாடி உள்ளார்.
இது மட்டுமின்றி கன்னடம், மலையாளம், பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் இவர் பாடல்களைப் பாடியுள்ளார்.1999 உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக இந்திய அணிக்காக ‘’ஜோஸ் ஆஃப் இஃதியா’’ எனும் உற்சாகமூட்டும் பாடலைப் பாடினார்.
இவரின் குழந்தை பருவ தோழியான ‘’ஜோதி’’ என்பவருடன் 1991 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ‘’நகுல் கிருஷ்ணா குன்னத்’’ (Nakul Krishna Kunnath) எனும் மகனும் ‘’தாமரா குன்னத்’’ (Tamara Kunnath) எனும் மகளும் உள்ளனர்.
இவர் நேற்று (மே 31) கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்த கொல்கத்தா இசை நிகழ்ச்சி நடந்து முடிந்த சில மணி நேரங்களில் பாடகர் கேகே எதிர்பாராத விதமாக மரணம் அடைந்துள்ளார்.இசை நிகழ்ச்சி நடத்து கொண்டிருக்கும் வீடியோவில் அவர் நலமாகவே இருந்துள்ளார்.
கொல்கத்தாவின் நஸ்ருல் மஞ்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை முடித்து ஹோட்டலுக்கு திரும்பி உள்ளார். அறைக்குச் செல்லும் போது, எதிர்பாராத விதமாக மரைடைப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவர் ஹோட்டல் படிக்கட்டுகளில் இருந்து அப்படியே கீழே விழுந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சிம்புவை உச்சத்தை தொடவைத்த ‘மாநாடு’ – ட்விட் பதிவிட்ட தயாரிப்பாளர்!!..
இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பாடகர் கேகேவின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரின் வயது 53 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
