பிரபல ரவுடி ‘நீராவி முருகன்’ என்கவுன்டரில் சுட்டுக்கொலை…! யார் அவர்?
இன்றைய தினம் தமிழகத்தில் பிரபல ரவுடி ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் நீராவி முருகன் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து ஐ.ஜி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி நீராவி முருகன் போலீசாரை தாக்கியதாக அன்பு கூறினார் குற்றத்தில் கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கியதாகவும் நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
என்கவுண்டர் தொடர்பாக களக்காடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தென் மண்டல ஐ.ஜி.அன்பு கூறினார். இந்த என்கவுண்டரில் எஸ்.ஐ இசக்கி ராஜா உள்பட மொத்தம் நான்கு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது என்று போலீஸ் தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்தான் நீராவி முருகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இசக்கி ராஜா தலைமையில் குழு அவரை தேடும் பணியில் போலீஸ் ஈடுபட்டது.
நீராவி முருகன் சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேடப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்று கொலைகள் உட்பட 37 வழக்குகளில் தொடர்புடைய நீராவி முருகன் 40 சவரன் கொள்ளை வழக்கில் தேடியபோது தாக்கியதால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
