மனைவியின் நினைவு நாள்!! பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை!!

சென்னை சூளைமேட்டு பகுதியில் பிரபல ரவுடியாக சுற்றி திரிந்தவர் பிரசாந்த். இவரது மனைவி குளோரி கடந்த ஆண்டு 18.09.2021-ம் தேதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரடிவு பிரசாந்த் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மனைவியின் நினைவு தினத்தில் ரடிவு பிரசாந்த் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரவுடி பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளிலில் ரடிவு பிரசாந்த் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment