Connect with us

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்!!

rakesh jhunjhunwala2 1639738198

செய்திகள்

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்!!

இந்திய பங்கு சந்தையின் தந்தை என அழைக்கப்படும் ராகேஷ் ஜீன்ஜீன் வாலா மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது முதலீட்டுகளை பெருமளவில் ஈர்த்தவர் ராகேஷ் ஜீன் ஜீன் வாலா. இவர் சமீபத்தியில் இவர் ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனத்தினை தொடங்கியதாக கூறப்படுகிறது.

அதோடு பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்ததாகவும், குறிப்பாக முதலீடு செய்வதில் ராகேஷ் ஜீன் ஜீன் வாலா மிகவும் பிரபலமானவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நல பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று காலை 6.45 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும். ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top